கண்டக்டரை தாக்கியவர்கள் மீது வழக்கு
கண்டக்டரை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.;
ராமநாதபுரம்,
மதுரையில் இருந்து நேற்று முன்தினம் ராமேசுவரத்திற்கு அரசு பஸ் வந்துகொண்டிருந்தது. இந்த பஸ் பரமக்குடியில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தபோது ஒரு பயணி மட்டும் டிக்கெட் எடுக்காமல் இருந்ததால் அதனை கண்டுபிடித்து ஏன் இவ்வளவு நேரம் டிக்கெட் எடுக்காமல் உள்ளீர்கள் என கண்டக்டர் ராமசுப்பிரமணியன் கண்டித் துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர் தனது நண்பர் களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பஸ் ராமநாதபுரம் டவுன் டெப்போ அருகில் வந்தபோது அதில் ஏறியவர்கள் கண்டக்டர் ராமசுப்பிரமணியனை தாக்கிவிட்டுதப்பி ஓடிவிட்டார்களாம். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.