விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை
சூளகிரி:
சூளகிரி அருகே உள்ள பந்தாரகுட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும்வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த ஆறுமுகம் விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.