ராமேசுவரம்,
உச்சிப்புளி வட்டான் வலசையைச் சேர்ந்த சீனி என்பவரது மகன் பாஸ்கரன் (வயது 41). இவர் மோட்டார் சைக்கிளில் பாம்பனுக்கு வந்து கொண்டிருந்தார். பாம்பன் பாலத்தில் வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த பாம்பன் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.