இரணியல் அருகே கால்வாயில் தவறி விழுந்த வியாபாரி சாவு

கால்வாயில் தவறி விழுந்த வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-03-24 17:47 GMT
திங்கள்சந்தை, 
கால்வாயில் தவறி விழுந்த வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
இரணியல் அருகே உள்ள காரங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜோசப் ரோசாரி (வயது 53). இவர், சொந்தமாக பேட்டரி கடை நடத்தி வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவர் நெட்டாங்கோடு மீன்கடை அருகில் உள்ள கிளை கால்வாயின் மேல் பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது, திடீரென நிலைதடுமாறி ஜோசப் ரோசாரி கால்வாய்க்குள் தவறி விழுந்தார்.
இதில், குப்புற விழுந்ததால் கால்வாய்க்குள் இருந்த சகதியில் சிக்கி மூச்சுத்திணறி ஜோசப் ரோசாரி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த இரணியல் போலீசார் விரைந்து சென்று ஜோசப் ரோசாரியின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து ஜோசப் ரோசாரியின் மகன் அகில்ரோஸ் (23) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்