காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் விபரீத முடிவு

குலசேகரம் அருகே காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-24 17:38 GMT
குலசேகரம், 
குலசேகரம் அருகே காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
புதுமாப்பிள்ளை
குலசேகரம் அருகே உள்ள செருப்பாலூர் இளமாங்கோட்டு விளையைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது33). மார்த்தாண்டத்தில் பழக்கடை நடத்தி வந்தார். இவர் பள்ளியாடி பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி  அபிஷாவை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
செந்தில்குமாருக்கு மது பழக்கம் இருந்ததாக தெரிகிறது. திருமணத்திற்கு பின்பு மனைவியின் நகைகளை அடகு வைத்து மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அபிஷா பெற்றோருடன் தனது வீட்டிற்கு ெசன்றார். இதையடுத்து கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
துக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில், நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த தாயார் வீட்டிற்கு வந்த போது செந்தில்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து குலசேகரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்