பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

சீர்காழி அருகே தென்னலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-24 17:20 GMT
சீர்காழி:
சீர்காழி அருகே தென்னலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் தனலட்சுமி தலைமை தாங்கினார். பள்ளி தலைமைஆசிரியர் சித்ரா வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் பூங்குழலி, நாகராஜ் ஆகியோர் பேசினர்.  மேலாண்மைக்குழு தொடங்குவது குறித்தும், தமிழ்நாடு அரசின் நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெய்சங்கர், ஆசிரியர் பயிற்றுனர் செல்வி, பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் இளங்கோவன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆசிரியர் கற்பகவல்லி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்