உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்
தேனியில் உலக காசநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தேனி:
தேனியில் உலக காசநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தேனி பங்களாமேட்டில் தொடங்கிய ஊர்வலம் பழைய பஸ் நிலையம் வரை நடந்தது. இதில், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் காசநோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். இதில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி நாதன், மருத்துவ நலப்பணிகள் (காசநோய்) துணை இயக்குனர் ராஜபிரகாஷ், இந்திய மருத்துவ கழக மாநில செயலாளர் டாக்டர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.