பகத்சிங் நினைவுநாள்
திருமருகல் அருகே பகத்சிங் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பகத்சிங் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் பாபு தலைமை தாங்கினார்.கட்டுமாவடி கிளைச் செயலாளர் தமிழரசன், மூத்த நிர்வாகி அப்பாவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால் கொடியேற்றி வைத்தார். இதை தொடர்ந்து வருகிற 30-ந் தேதி முதல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 1-ந் தேதி வரை 3 நாள் நடைபெறும் மாநில மாநாட்டை முன்னிட்டு 23 மாநாட்டு கொடிகளும் ஏற்றப்பட்டது.இதில் ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் செல்வகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.