பில்லூர் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
பில்லூர் அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
விழுப்புரம்,
கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் பில்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆசிரியர்கள் வருகை குறித்து பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன் மாணவ- மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பஸ்சில் பயணம் செய்து வருகிறார்களா? என்றும் கண்காணித்தார். பின்னர் கலெக்டர் மோகன் கூறுகையில், இப்பள்ளியில் மாணவிகளுக்கு போதிய அளவு கழிப்பறை கட்டிடங்கள் கட்டித்தர கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்கான நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறையின் மூலம் உடனடியாக மேற்கொள்ளப்படும். மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் நடப்பு நிதியாண்டில் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் குடிநீர் போதிய அளவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தேவையான கல்வியை ஆர்வமுடன் கற்றுத்தரவும், சுகாதாரமான முறையில் பாதுகாப்புடன் பள்ளியை பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.