கோத்தகிரியில் பலத்த மழை சாலையில் மரம் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரியில் பெய்த பலத்த மழையால் சாலையில் மரம் சரிந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-03-24 16:48 GMT
கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இரவு 7 மணி முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் பாக்கிய நகர் அருகே கற்பூர மரம் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. 

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு நிலைய அதிகாரி கருப்பசாமி, தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். 

அதுபோன்று கோத்தகிரியில் இருந்து கன்னேரிமுக்கு செல்லும் சாலையிலும் மரம் விழுந்தது. இதனால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று அந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். அதன் பின்னர் அங்கு போக்குவரத்து சீரானது. 

மேலும் பந்தலூர் அருகே உள்ள மேங்கோரேஞ்ச், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, மழவன்சேரம்பாடி, குறிஞ்சிநகர், சேரம்பாடி, எருமாடு உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

இரவில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து. இதனால் பல இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் அங்கு மின்தடையும் ஏற்பட்டது. 

அதுபோன்று பந்தலூர் நத்தம் பகுதியில் உயர் மின் அழுத்த பிரச்சினை ஏற்பட்டு  ஏராளமான வீடுகளில் டி.வி., மிக்சி, கிரைண்டர்கள் பழுதானது. எருமாடு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மழைநீர் சூழ்ந்து நின்றது. இதனால் அங்கு சென்ற பொதுமக்கள் அவதியடைந்தனர். 

மேலும் செய்திகள்