வீடு புகுந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி
வீடு புகுந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
பேரூர்
தொண்டாமுத்தூர் அருகே உள்ள புத்தூர் புதுக்காலனியை சேர்ந்தவர் திவாகர் (வயது 24), கட்டிட தொழிலாளி. இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனது வீட்டில் குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது வீட்டிற்குள் குடிபோதையில் புகுந்த திவாகர், பெண்ணின் அருகில் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்த பெண் சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த திவாகர் பெண்ணின் வாயை மூடி, ஆசைக்கு இணங்குமாறு தாக்கியதாக தெரிகிறது.
இதற்கிடையில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். இதனைக்கண்ட திவாகர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி திவாகரை கைது செய்தனர்.