மளிகை கடைக்குள் புகுந்த நாகபாம்பு

வேடசந்தூரில், மளிகை கடைக்குள் நாகப்பாம்பு புகுந்தது. இதனால் வாடிக்கையாளாக்ள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Update: 2022-03-24 16:44 GMT
வேடசந்தூர்:

வேடசந்தூர் காந்திநகர் தங்கமுனியப்பன் கோவில் முன்பு ஜெயக்குமார் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை வழக்கம்போல வாடிக்கையாளர்களுக்கு அவர் பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். 

அப்போது திடீரென பாம்பு ஒன்று கடைக்குள் புகுந்தது. 
இதனைக்கண்ட ஜெயக்குமார், கடையில் இருந்து வெளியே ஓடி வந்தார். இதேபோல் கடையில் பொருட்கள் வாங்க நின்றிருந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் ஒரு மணி நேரம் தேடுதலுக்கு பிறகு, கடையில் மூட்டைக்குள் பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள கோதுமை நாகபாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்