கயிறு தொழிற்சாலையில் தீ
நிலக்கோட்டை அருகே கயிறு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டையை அடுத்த மட்டப்பாறை கிருஷ்ணாபுரம் அருகே தனியார் கயிறு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அந்த தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் தீ மள, மளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, சோழவந்தான் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள கயிறு மற்றும் எந்திரங்கள் நாசமானதாக தெரிகிறது. இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாவூத் உசேன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.