பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா பூக்கள்

கொடைக்கானலில் ஜெகரண்டா பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

Update: 2022-03-24 16:18 GMT
கொடைக்கானல்:

சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலின் இயற்கை அழகை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை தருகின்றனர். இந்தநிலையில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதத்தில், கொடைக்கானலில் ெஜகரண்டா பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. 

குறிப்பாக கொடைக்கானல்-வத்தலக்குண்டு, கொடைக்கானல்-பழனி மலைப்பாதைகளில் சாலையோரத்தில் இளநீல நிறத்தில் இந்த பூக்கள் பூத்துள்ளன. மலைப்பாதைகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பூக்களை பார்த்து ரசிப்பதோடு, அதன் அருகே புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

மேலும் செய்திகள்