மத்திய, மாநில அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
மத்திய, மாநில அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், வளர்ச்சி திட்டப்பணிகளான அனைத்து ஊராட்சி பகுதிகளில் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகள், ஊறிஞ்சிக்குழி அமைக்கும் பணிகள், சாலை அமைக்கும் பணிகள், பெருமளவு மரக்கன்று நடும் பணிகள், குடிநீர் குழாய் இணைப்புகள் அமைக்கும் பணிகள், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டப்பணிகள் உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சிதுறையை சேர்ந்த அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் பிப்ரவரி மாதம் வளர்ச்சி திட்டப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு விகிதாசார இலக்கினை எய்திய வட்டாரங்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கூடுதல் கலெக்டர் வழங்கினார்.
இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையை சேர்ந்த செயற் பொறியாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதவி இயக்குனர் நிலையிலன அலுவலர்கள், உதவி செயற் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணிமேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.