வால்பாறையில் இடியுடன் கனமழை

வால்பாறையில் இடியுடன் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-03-24 15:53 GMT
வால்பாறை

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக வால்பாறையில் கடந்த 18-ந்தேதி லேசான சாரல் மழை பெய்தது. பின்னர் அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் லேசாக மழை பெய்யத்தொடங்கியது. 

இதையடுத்து சிறிது நேரத்தில் இடியுடன் கன மழையாக கொட்டித்தீர்த்தது. சுமார் 2 மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவர்கள் குடைபிடித்தப்படி சென்றனர். இந்த கனமழை காரணமாக வால்பாறை பகுதி பொதுமக்கள் மற்றும் ேதயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும் செய்திகள்