கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

Update: 2022-03-24 15:24 GMT
பெங்களூரு:

பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கெம்பாபுரா பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன். இவரது மனைவி நிகிலா (வயது 37). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அர்ஜுன் வெளியே சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த நிகிலா திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த அர்ஜுன் வீட்டுக்கு திரும்பிய போது மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்ததும் அம்ருதஹள்ளி போலீசார் விரைந்து வந்து நிகிலா உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

  அப்போது கணவன், மனைவி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதனால் நிகிலா என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்