காற்று மாசுபடுவதை தடுக்க மரங்களை பாதுகாக்க வேண்டும்

காற்று மாசுபடுவதை தடுக்க மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2022-03-24 13:45 GMT
பொள்ளாச்சி

காற்று மாசுபடுவதை தடுக்க மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக சிட்டுக்குருவிகள் தினம், உலக வன தினம் மற்றும் உலக தண்ணீர் தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை தாங்கினார்.
விழாவில் சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி ஓவியம், தானிய ஓவியம், கவிதைகள், பாடல்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மரங்கள் வெட்டுவதை தடுக்க மரப்பென்சில் பயன்படுத்தி வரும் நிலையை குறைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகத்துடன் கூடிய காகித விதை பேனா வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை கீதா பேசும்போது கூறியதாவது:-

தண்ணீர் பற்றாக்குறை

இயற்கை விவசாயத்தை பேணுவதன் மூலம் சிட்டுக்குருவியின் உணவான புழு, பூச்சிகள் அழியாமல் பாதுகாக்கலாம். தொழில் வளர்ச்சி மற்றும் நகர மயமாகுதல் மூலம் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ்வதற்கு இடம் இல்லாமல் அவை அழிகிறது. சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ப கான்கீரிட் வீடுகளுக்கு மேல் கூண்டுகள், பாதுகாப்பு பெட்டிகள் வைத்து, தண்ணீர், உணவாக தானியங்கள் வைத்து சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டும். மேலும் உலகில் 190 கோடி பேர் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர்.
உலகில் 210 கோடி பேருக்கு சுத்தமான குடிநீர் வசதி இல்லை. 70 சதவீதம் தண்ணீர் விவசாய தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே தண்ணீரை சிக்கமான பயன்படுத்த வேண்டும். மரங்கள் அழிந்து வருவதால் மழைப்பொழிவு குறைந்து காற்று மாசுபடுகிறது. இதன் மூலம் பருவநிலை மாற்றம், உணவு பற்றாக்குறை, பறவைகளின் வாழ்விடம் குறைகிறது. எனவே மரங்களை பாதுகாத்தால் தான் பறவை இனங்கள் அழியாமல் பாதுகாக்கவும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. எனவே மரங்களை பாதுகாத்து வருங்கால தலைமுறைக்கு பரிசாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்