பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது

சேத்துப்பட்டு அருகே பெண்ணை பேனா கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-24 13:24 GMT
சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த பெரணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வேதமுனி. அவரது மனைவி பூங்காவனத்தம்மன் (வயது 47).

இவரை, அதே கிராமத்தை சேர்ந்த திருமலை (50) ஆபாசமாக பேசி பேனா கத்தியால் குத்தியதாக தெரிகிறது. 

இதில் காயம் அடைந்த பூங்காவனத்தம்மன் சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டார். 

இதுகுறித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து திருமலையை கைது செய்தார்.

மேலும் செய்திகள்