மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டை வழங்கும் முகாம் நாளை நடக்கிறது
செங்கல்பட்டு மாவட்ட மாற்றுதிறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டை வழங்கும் முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறுகிறது. இலவச பஸ் பயண அட்டை வேண்டுபவர்கள் 2 புகைப்படம், 2 விண்ணப்பம், தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, யு.டி.ஐ.டி. கார்டு, பணிக்குச் செல்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள், பயிற்சிக்கு செல்பவர்கள் அந்தந்த நிறுவனத்திலிருந்து அசல் கடிதம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் 2 நகல்கள் மற்றும் அசல் தேவைப்படுகிறது. எனவே இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கு பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இந்த முகாம் காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பயணம் செய்வதற்கு மட்டும் பயன்படுத்தலாம். காஞ்சீபுரம் அரசு பஸ் அலுவலர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு நேரடியாக பயண அட்டை வழங்குவார்கள். கண்டிப்பாக சென்ற ஆண்டு வாங்கிய பயண அட்டையை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.