தூத்துக்குடி மாநகராட்சியில் காசநோய் ஒழிப்பு உறுதி மொழியேற்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் நடந்த காசநோய் ஒழிப்பு உறுதி மொழியேற்பு நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர்

Update: 2022-03-24 12:21 GMT
தூத்துக்குடி:
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியில் காசநோய் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். தொடர்ந்து அனைத்து அலுவலர்களும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் அருண்குமார், உதவி ஆணையர் (பணியமைப்பு) சந்திரமோகன், நிர்வாக அலுவலர் தனசிங், உதவி செயற் பொறியாளர் (பணிகள்) சரணவன், கணக்கு அலுவலர் பாலசுந்தரம், சுகாதார அலுவலர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர் மற்றும் மாநகராட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்