நெல்லை: சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-03-23 23:24 GMT
நெல்லை:
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து அகில இந்திய அளவில் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் பொது வேலைநிறுத்தம் நடக்கிறது. இந்த பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தும், போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கும் டீசல் விலை உயர்வை கண்டித்தும் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று தொ.மு.ச. மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பணிமனை தொ.மு.ச. செயலாளர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 
இதில் தொ.மு.ச. மாநில துணை தலைவர் சிதம்பரம், பொருளாளர் ராஜமுத்து, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன், சி.ஐ.டி.யு. மத்திய சங்க உதவி தலைவர் அருண், பணிமனை பொருளாளர் சங்கர நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்