ஈரோட்டில் இளம்பெண் குளித்ததை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது
ஈரோட்டில் இளம்பெண் குளித்ததை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
ஈரோட்டில் இளம்பெண் குளித்ததை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இளம் பெண்
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருமணம் ஆகாத 26 வயது இளம் பெண், ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வருகிறார். அவர் போட்டி தேர்வுக்காக படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வீட்டில் குளியலறையில் அவர் குளித்து கொண்டு இருந்தார்.
அப்போது குளியலறையின் மேல் கண்ணாடி ஜன்னல் துவாரத்தில் செல்போன் லைட் எரிந்து கொண்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக உடையை மாற்றிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தார்.
குளிப்பதை வீடியோவாக...
அப்போது தனது வீட்டிற்கு எதிரில் மொட்டை மாடியில் வசித்து வரும், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வரும் கண்ணன் (வயது 29) என்பவர், அந்த பெண் வசித்து வரும் மொட்டை மாடியில் குதித்துள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண் வீட்டுக்குள் ஒடினார்.
அப்போது கண்ணன் இளம்பெண் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தான் கையில் வைத்திருந்த செல்போனை காண்பித்து இதில் நீ குளிப்பதையும், உடை மாற்றுவதையும் வீடியோவாக படம் எடுத்து வைத்திருக்கிறேன் என்று கூறி உள்ளார்.
கத்தியை காட்டி மிரட்டல்
மேலும் அவர் அந்த இளம்பெண்ணிடம், ‘நான் கூப்பிடும்போதெல்லாம் நீ என் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் இந்த வீடியோவை சமூக வலை தளங்களில் போட்டு உன் மானத்தை வாங்கி விடுவேன் என்றும்’ மிரட்டி உள்ளார்.
இதைப்பற்றி யாரிடமாவது சொன்னால் தனியாகத்தான் இருக்கிறாய் உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்றும் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோய் அவர் சத்தம்போட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதை அறிந்த கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கண்ணனை கைது செய்தனர்.