காரைக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த நீதிமன்றத்தை கண்டித்து காரைக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2022-03-23 21:07 GMT
காரைக்குடி,
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைக்கண்டித்து பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று  காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் இஸ்லாமிய கூட்டமைப்பினர், வியாபாரிகள் ஆகியோர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முஸ்லிம்கள் மற்றும் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்தபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்