நகைக்கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி மனு

நகைக்கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Update: 2022-03-23 20:59 GMT
தாமரைக்குளம்
 நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற 5 பவுன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ஆட்சி பொறுப்பேற்றதும் அரியலூர் மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் அடகு வைத்திருந்த 5 பவுன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
 இந்தநிலையில், கடன் தள்ளுபடி பெறாத திருமானூர், தா.பழூர், கருப்பூர், பொய்யூர், ஆயுதக்களம், அயன் தத்தனூர், சுத்தமல்லி, ஆனந்தவாடி, வரதராஜன்பேட்டை, கொடுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரியலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.
மனு
அந்த மனுவில், நகைக்கடன் தள்ளுபடிக்கான தகுதி இருந்தும், எங்களது கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. எங்களுக்கு முன்பும், பின்பும் நகை அடகு வைத்தவர்களுக்கெல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காரணம் கேட்டால் வங்கி மேலாளர்கள் சரியான பதில் கூறுவதில்லை. எனவே, தகுதி உள்ள விவசாயிகளுக்கு நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். 

மேலும் செய்திகள்