வடசேரியில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை

வடசேரியில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-03-23 20:27 GMT
நாகர்கோவில், 
வடசேரியில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
நாகர்கோவில் பள்ளிவிளை ஜார்ஜ் காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் சுயம்பு. இவருடைய மனைவி செல்லம் (வயது 76). இவருக்கு கடந்த சில மாதங்களாக கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டது. அதற்காக செல்லம் பார்வதிபுரத்தில் உள்ள தனது மகள் மல்லிகா வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு கண் பார்வை குறைபாடு சரியாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக செல்லம் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் தனது வீட்டுக்கு திரும்பிய செல்லம் நேற்று முன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மல்லிகா வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்