நதிக்குடியில் குறைந்த நெல் மகசூல்
நதிக்குடியில் நெல் மகசூல் மற்றும் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
ஆலங்குளம்,
நதிக்குடியில் நெல் மகசூல் மற்றும் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
செங்குளம் கண்மாய்
ஆலங்குளம் அருகே நதிக்குடி கிராமம் உள்ளது. இங்கு உள்ள செங்குளம் கண்மாய் முழுமையாக பெருகி இருந்தது. நதிக்குடி, ஆத்தூர் விவசாயிகள் இந்த கண்மாய் பாசனம் மூலம் 300 ஏக்கர் வரை நெல் சாகுபடி செய்திருந்தனர். தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையின் காரணமாக செங்குளம் கண்மாய் நிரம்பியது. இதனால் நதிக்குடி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நெல்லினை சாகுபடி செய்தோம்.
மகசூல் குறைவு
தற்போது அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த ஆண்டு ஏக்கருக்கு 24 மூடை நெல்தான் மகசூல் கிடைத்தது. ஆனால் கடந்த ஆண்டு ஓரளவு மகசூல் இருந்தது.
கடந்த ஆண்டு 75 கிலோ கொண்ட ஒரு மூடை நெல் ரூ.1,500-க்கு விற்பனை ஆனது. ஆனால் இந்த ஆண்டு ரூ.1,100-க்கு விற்பனையானது. நாங்கள் எதிர்பார்த்த மகசூலும் இல்ைல. விலையும் இல்லை. எனவே அனைத்து விவசாயிகளும் கவலையில் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணத்ெதாகை வழங்கினால் ஓரளவு எங்களது கடன் சுமை குறையும். அதேபோல நெல்லின் விலையை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.