பீரோவை உடைத்து 12 பவுன் நகை திருட்டு

ராஜபாளையம் அருகே பீரோவை உடைத்து 12 பவுன் நகையை திருடி சென்றனர்.;

Update: 2022-03-23 20:16 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூரை சேர்ந்தவர் முத்து பாண்டி (வயது30). இவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆனந்த ஜோதி. இவர் கர்ப்பமாக இருந்ததால் அவரது பெற்றோர் வீட்டில் தற்போது உள்ளார். வெளியே சென்ற முத்து பாண்டி மீண்டும் வீட்டிற்கு வந்த போது பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்்ச்சி அடைந்தார். பீரோ லாக்கரை உடைத்த மர்மநபர்கள் அதில் இருந்த  12 பவுன் தங்கநகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முத்து பாண்டி அளித்த புகாரின் பேரில் சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்