வெம்பக்கோட்டை அணையில் பழுதான மதகுகளில் இருந்து வெளியேறும் தண்ணீர்

வெம்பக்கோட்டை அணையிலிருந்து பழுதான மதகுகளில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2022-03-24 01:27 IST
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை அணையிலிருந்து பழுதான மதகுகளில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
குடிநீர் ஆதாரம் 
சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணை கடந்த 6 ஆண்டுக்கு பிறகு முழுமையாக நிரம்பியது. மேலும் தொடர்ச்சியாக மூன்று வாரம் தண்ணீர் வைப்பாற்றில் திறக்கப்பட்டது. 
 கடந்த 5 ஆண்டுகளாக அணையின் மதகுகள் (ஷட்டர்கள்) பழுதடைந்து காணப்படுகிறது. தற்போது நிரம்பிய அணையில் இருந்து 3,4,5 ஆகிய மதகுகளில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. 
விவசாயிகள் கவலை 
தமிழக அரசு தண்ணீர் தினத்தை முன்னிட்டு நிலத்தடிநீரை காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனால் 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய அணையில் இருந்து சேதமடைந்த மதகின் வழியாக தண்ணீர்  வெளியேறி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.  எனவே பழுதடைந்த மதகுகளின் வழியாக தண்ணீர் வெளியேறுவதை தடுக்கவும், மதகுகளை உடனே சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்