நிலஅளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நிலஅளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2022-03-23 19:34 GMT
பெரம்பலூர்
களப்பணியாளர்களின் பணி சுமையை குறைத்து பணியை முறைப்படுத்திட வேண்டும். நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். தள்ளுபடி விகிதத்தை குறைத்திட கூட்டு பட்டா பரிந்துரையை ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தினர் 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் நில அளவை அலுவலர்கள் பிரிவில் களப்பணியாளர்கள், புல உதவியாளர்களில் மொத்தம் உள்ள 33 பேரில், 6 பெண்கள் உள்பட 18 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்