லாரியுடன் 2¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

2¾ டன் கடத்தல் ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் ெசய்த ேபாலீசார், இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த 3 பேரை கைது ெசய்தனர்.;

Update: 2022-03-23 19:27 GMT
விருதுநகர், 
2¾ டன் கடத்தல் ரேஷன் அரிசியை லாரியுடன் பறிமுதல் ெசய்த ேபாலீசார், இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த 3 பேரை கைது ெசய்தனர். 
ரேஷன் அரிசி 
விருதுநகர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆல்பின் மேரிபிரைட் தலைமையில் போலீசார், விருதுநகர்- மல்லாங்கிணறு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது வலையங்குளம் சந்திப்பில் வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அந்த லாரியில் தலா 45 கிலோ எடை கொண்ட 63 ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. லாரியில் இருந்த மொத்த ரேஷன் அரிசி எடை 2 ஆயிரத்து 835 கிலோ ஆகும். 
3 பேர் கைது 
எனவே லாரியில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் மதுரை காமராஜர் தெருவை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பாண்டிவேல் அரிசி வியாபாரி, ஆறுமுகம் லாரி உரிமையாளர் ஆவார். மற்றொருவர் இவர்களுக்கு உதவியாளர் முனீஸ்வரன்.  மேலும் இவர்கள், அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து மதுரைக்கு கடத்திவர முயன்றது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, லாரியை பறிமுதல் செய்ததுடன், 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்