மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-03-23 19:15 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 74 ஆயிரத்து 247 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதியானது. அதாவது, கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த நெய்வேலி என்.எல்.சி.யை சேர்ந்த ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 74 ஆயிரத்து 248 ஆக உயர்ந்தது.
நேற்று முன்தினம் வரை 73 ஆயிரத்து 343 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுவரை கொரோனாவுக்கு 895 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட 9 பேர் கடலூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்