நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

Update: 2022-03-23 19:14 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகளும், 33 அணைக்கட்டுகளும் உள்ளன. உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர் ஆதாரத்தை அதிகப்படுத்தவும் ஏரிகள் மற்றும் நீர்வழித்தடங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையாகவும், உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரிலும், கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா அறிவுறுத்தலின்படியும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இதன் தொடர்ச்சியாக வேப்பந்தட்டை தாலுகா, வெங்கனூரில் நீர்நிலைகளில் இருந்த குடிசை வீடுகள் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் நீர்வளத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் முழுவதுமாக அகற்றினர். அப்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்