திருக்களம்பூர் வீரமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

வீரமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-03-23 19:09 GMT
பொன்னமராவதி:
வீரமாகாளியம்மன் கோவில்
பொன்னமராவதி அருகே திருக்களம்பூரில் கண்ணப்பட்டார் பங்காளிகளால் புதிதாக  வீரமாகாளியம்மன், வீராமுனியன் சாமி கோவில் கட்டப்பட்டது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 2 கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதையடுத்து பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் வீரமாகாளியம்மன் கோவிலில் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  
ஊர்காவலன் கோவில் 
பொன்னமராவதி அருகே கோவனூர் ஊர் எல்லையில் உள்ள ஊர்காவலன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 3 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. பிறகு பரிவார தெய்வங்களான முப்புலியான், சாத்தையன், சாவக்காரன், சோனையன், நல்லதங்காள், பாப்பாத்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் ஊர்காவலனுக்கும் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. இதைதொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்