விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷக நிறைவு விழா நடைபெற்றது.

Update: 2022-03-23 19:04 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேக விழா தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மண்டலாபிஷேக நிறைவு விழா  நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜையுடன் தொடங்கியது,  தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜையும், அதன்பின்னர் 9.30 மணிக்கு 1008 சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடந்தது. 

இதையடுத்து கலசங்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு  வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
 
மண்டலாபிஷேகம் நிறைவு

பின்னர் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரை பஞ்சமூர்த்திகள் மீது சிவாச்சாரியார்கள் ஊற்றி சிறப்பு பூஜை செய்து மண்டலாபிஷேகத்தை நிறைவு செய்தனர். இதில் கும்பாபிஷேக கமிட்டி குழு தலைலர் அகர்சந்த், செயல்அலுவலர் மாலா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்