விளையாட்டு விடுதிகளில் சேர தகுதி தேர்வு மாணவ-மாணவிகள் பங்கேற்பு
விளையாட்டு விடுதிகளில் சேர தகுதி தேர்வு நடைபெற்றது.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் விளையாட்டு விடுதிகளில் தங்கி மாணவ-மாணவிகள் பயில தகுதித்தேர்வு புதுக்கோட்டை மாவட்ட அளவில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாணவ-மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் தாங்கள் விரும்பும், சிறந்து விளங்க கூடிய பிரிவில் பங்கேற்றனர். அவர்களுக்கு குறிப்பிட்ட தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வானவர்களுக்கு அடுத்ததாக மாநில அளவிலான தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயில தகுதியானவர்கள்.