மாற்றுதிறன் மாணவர்களுக்கான மதிப்பீட்டு முகாம்

நெமிலி, பனப்பாக்கத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மதிப்பீட்டு முகாம் நடை்பெற்றது.

Update: 2022-03-23 18:55 GMT
நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் பனப்பாக்கத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மதிப்பீட்டு முகாம் நேற்று நடைபெற்றது.

 நெமிலி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் 86 மாணவர்களுக்கும், பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் 43 மாணவர்களுக்கும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

மாற்றுத்திறன் மாணவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான அரசு நல திட்டங்கள் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக பள்ளிகல்வித்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்