கார் மீது கன்டெய்னர் லாரி மோதி 5 பேர் காயம்

நெமிலி அருகே கார் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-03-23 18:54 GMT
நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் சென்றபோது ஸ்ரீபெரும்பத்தூரில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, கார் மீது மோதியது.

இதில் காரில் பயணம்செய்த டிரைவர் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக நெமிலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்