கஞ்சா பதுக்கிய பெண் கைது
திருவண்ணாமலையில் கஞ்சா பதுக்கிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை சமுத்திரம் நகரை சேர்ந்தவர் சுபாஷினி (வயது 40). இவரது வீட்டில் கஞ்சா, சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது சுபாஷினி வீட்டில் 10 லிட்டர் சாராயம் மற்றும் 100 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கஞ்சா, சாராயத்தை பறிமுதல் செய்து சுபாஷினியை கைது செய்தனர்.