உம்பளச்சேரி இன மாடுகள் படத்துடன் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
காவிரி மண்டல மெய்நிகர் அஞ்சல் தலை கண்காட்சி நிறைவு விழாவில் உம்பளச்சேரி இன மாடுகள் படத்துடன் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
திருச்சி, மார்ச்.24-
காவிரி மண்டல மெய்நிகர் அஞ்சல் தலை கண்காட்சி நிறைவு விழாவில் உம்பளச்சேரி இன மாடுகள் படத்துடன் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
திருச்சி மத்திய அஞ்சல் மண்டலம் சார்பில் காவிரி மண்டல 9-வது அஞ்சல் தலை மெய்நிகர் கண்காட்சி ஆன்லைன் மூலம் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. "அஞ்சல் தலை சொல்லும் கலை" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியின் நிறைவு விழா மற்றும் கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா திருச்சி எஸ்.ஆா்.எம். ஓட்டலில் உள்ள முத்துமஹாலில் நேற்று மாலை நடைபெற்றது.
திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன் வரவேற்றார். விழாவுக்கு திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் தலைமை தாங்கி உம்பளச்சேரி இன மாடுகள் குறித்த அஞ்சல் உறை மற்றும் கண்காட்சி தொடர்பான சிறப்பு அஞ்சல் அட்டைகளை வெளியிட்டார். அதை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாகை மாவட்ட கலெக்டர் டாக்டர்.அருண் தம்புராஜ் பெற்றுக்கொண்டார். தமிழ்நாடு வட்ட அஞ்சல் இயக்குனர் (தலைமையிடம்) ஆறுமுகம் வாழ்த்திப்பேசினார்.
உம்பளச்சேரி இன மாடுகள்
நாகை மாவட்ட கலெக்டர் டாக்டர்.அருண் தம்புராஜ் பேசும் போது, தற்போது நாட்டு மாடுகள் அழிந்து வருகின்றன. டெல்டாவில் பிரசித்தி பெற்ற உம்பளச்சேரி நாட்டு இன மாடுகளும் அழிந்து வரும் நிலையில் உள்ளது. இதை மீட்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களாகிய நீங்கள் நேர்மையாக இருந்தால் இலக்கை எளிதில் அடையலாம் என்றார்.
விழாவில் மண்டல அஞ்சல்துறை தலைவர் அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் பேசும்போது, தற்போது தனிப்பட்ட கடிதங்கள் எழுதும் வழக்கம் குறைந்துவிட்டது. சேமிப்பு பழக்கத்தை மக்களிடமும், மாணவர்களிடமும் வளர்ப்பதில் பெரும்பங்கு அஞ்சல்துறைக்கு உண்டு. இந்தியாவில் வீடு தேடி சென்று சேவை அளிப்பது அஞ்சல்துறை மட்டும்தான். செல்வ மகள் திட்டத்தில் ஒரு குழந்தை கூட விடாமல் சேர நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்கள் உதவியை நாட உள்ளோம். அஞ்சல்துறை நாட்டின் பண்பாட்டை பாதுகாத்து வருகிறது என்றார்.
மாணவ-மாணவிகளுக்கு பரிசு
போட்டிகளில் வெற்றி பெற்ற 36 மாணவ-மாணவிகள் உள்பட 56 பேருக்கும் 3 பள்ளிகளுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி மாணவ-மாணவிகள், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள், பட்டுக்கோட்டை பகுதி விவசாயிகள், திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.