பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவண்ணாமலையில் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கோவிந்தசாமி நகர் பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 25), எம்.சி.ஏ. படித்துள்ளார். தற்போது ‘ஆக்டிங்’ டிரைவராக பணி செய்து வந்தார்.
நேற்று காலை அவரது தாயார் படித்த படிப்பிற்கு ஏற்ப வேலைக்கு செல்வது தானே என்று சதீஷை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.