விஷம் குடித்த மூதாட்டி சாவு
நன்னிலம் அருகே விஷம் குடித்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.;
நன்னிலம்:
நன்னிலம் அருகே உள்ள நெம்மேலி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி சகுந்தலா (வயது 62). இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி தாங்க முடியாமல் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர், நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.