இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Update: 2022-03-23 18:35 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, துங்கபுரம் கிழக்கு தெருவில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், நாங்கள் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள். கூலி வேலை செய்து தான் பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு சொந்த வீட்டுமனை இல்லாததால் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்