கலவை காவல் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

கலவை காவல் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆய்வு செய்தார்.

Update: 2022-03-23 18:05 GMT
கலவை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை போலீஸ் நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் நேற்று மாலை 7 மணிக்கு திடீரென ஆய்வு செய்தார். 

அப்போது அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார். 

இதையடுத்து கலவை நகரத்தை சுற்றி பார்வையிட்டார். மேலும் கலவை பேரூர் பற்றியும் சுற்றியுள்ள கிராமங்கள் பற்றியும் அவர் போலீசாரிடம் கேட்டறிந்தார். 

அப்போது இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, சங்கர், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்