புகழிமலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
புகழிமலை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.;
வேலாயுதம்பாளையம்,
வேலாயுதம்பாளையத்தில் புகழிமலையில் முருகன் கோவிலில் பங்குனி மாத தேய்பிறை சஷ்டியையொட்டி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம்செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதேபோல காகிதபுரம் குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியர் கோவில், பவித்திரம் பாலமலை முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு அபிேஷகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.