பெரியாம்பட்டியில் உணவு பாதுகாப்பு உரிமம் பெற சிறப்பு முகாம்
பெரியாம்பட்டியில் உணவு பாதுகாப்பு உரிமம் பெற சிறப்பு முகாம் நடந்தது.
காரிமங்கலம்:
காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டியில் உணவு பாதுகாப்பு உரிமம் பெற சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பானுசுஜாதா தொடங்கி வைத்தார். வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் முன்னிலை வகித்தார். முகாமில் பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் உணவு பாதுகாப்பு உரிமம் பெற விண்ணப்பித்தனர். அப்போது மாவட்ட அலுவலர் பேசுகையில், உணவு தயாரிப்பாளர்கள், மளிகை கடை, பேக்கரி ஓட்டல் நடத்திவரும் வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும். வணிகர்கள் உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, சங்கர் வணிகர் சங்க பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.