தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,:
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கல்பனா தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் முருகன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், செயலாளர் சேகர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நில அளவை களப்பணியாளர்களின் பணியை முறைப்படுத்த வேண்டும். நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மாவட்ட மாறுதல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மகளிர் குழு துணை அமைப்பாளர் இளவேனில், மாநில துணை தலைவர் பழனியம்மாள், புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.