சத்துணவு அமைப்பாளர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளை

வாணாபுரம் அருகே பட்டப்பகலில் சத்துணவு அமைப்பாளர் வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Update: 2022-03-23 17:52 GMT
வானாபுரம்

வாணாபுரம் அருகே பட்டப்பகலில் சத்துணவு அமைப்பாளர் வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

 கதவு உடைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள நாச்சானந்தல் பகுதியை சேர்ந்தவர் சீதாபதி (வயது 63), விவசாயி. இவரது மனைவி ராஜகுமாரி, சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். 

நேற்று காலையில் சீதாபதி, மனைவி ராஜகுமாரியை சத்துணவு மையத்தில் விட்டுவிட்டு விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டார். 

மாலையில் கணவன்-மனைவி இருவரும் வீட்டிற்கு வந்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

 20 பவுன் நகை கொள்ளை

இதுகுறித்து வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை செய்ததில், வீட்டில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபா்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

 ெகாள்ளைப்போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளைப்போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்