மர்ம நபர்கள் திருட முயன்ற பஞ்சலோக ஆஞ்சநேயர் சிலை அறநிலையத்துறை ஆய்வாளரிடம் ஒப்படைப்பு
மர்ம நபர்கள் திருட முயன்ற பஞ்சலோக ஆஞ்சநேயர் சிலையை அறநிலையத்துறை ஆய்வாளரிடம் கிராமமக்கள் ஒப்படைத்தனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உனிசேநத்தம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கும்மாள அக்ரஹாரம் கிராமத்தில் கம்பத அனுமந்தராய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த பஞ்சலோக ஆஞ்சநேயர் சிலையை மர்ம நபர்கள் திருடி செல்ல முயன்றனர். இதையடுத்து கிராமமக்கள் அந்த சிலையை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதையடுத்து கிராமமக்கள், பாரதீய ஜனதா கட்சி மாவட்ட துணைத்தலைவர் பாப்பண்ணா, மாவட்ட பொதுச்செயலாளர் ரங்கநாத், மாவட்ட துணைத்தலைவர் ராமச்சந்திரன் மற்றும் ஸ்ரீனிவாச ரெட்டி, மஞ்சு ஆகியோர் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கோமதியிடம் சிலையை ஒப்படைத்தனர்.