வேப்பனப்பள்ளியில் சூறைக்காற்றுடன் கனமழை
வேப்பனப்பள்ளியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.;
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென மேகம் திரண்டு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் விளம்பர பலகைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.